சென்னையில் ரூ.5-க்கு மருத்துவம் பார்த்த திருவேங்கடம் காலமானார்...!! தலைவர்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க இரங்கல்!!!

சென்னை: மெர்சல் படத்தில் வரும் விஜய் போன்று 5 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்று மருத்துவ சேவையாற்றிய மருத்துவர் திருவேங்கடம் மறைவு வட சென்னை மக்களை மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1903ம் ஆண்டு சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரிலியில் மருத்துவம் படித்த திருவேங்கடம் வியாசர்பாடியில் க்ளினிக் அமைத்து வட சென்னை மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வந்தார். இதனைத்தொடர்ந்து ஏழைகளுக்கு கட்டணம் பெறாமலும், வற்புறுத்தி வழங்குவோரிடம் 5 ரூபாய் மட்டுமே பெற்று கொண்டு அவர் மருத்துவம் பார்த்தவர். இதனையடுத்து இவருடன் படித்த பல மருத்துவர்கள் வெளி நாடுகளிலும், மிகப்பெரிய மருத்துவமனைகளிலும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வாழும் நிலையில், மக்களுக்காக இவர் கடைசி வரை மருத்துவ சேவையை வழங்கியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து மக்களுக்காக ஒரு மருத்துவமனையை கட்டி, அவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சையளிக்க வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டிருந்த 70 வயதான மருத்துவர் திருவேங்கடம் மாரடைப்பால் உயிரிழந்தார். வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே அர்ப்பணித்து மருத்துவம் பார்த்த மருத்துவர் திருவேங்கடத்தின் மறைவு வட சென்னை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வட சென்னையில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தொடங்கி, தனது வாழ்நாளில் அதிகபட்சமாக 5 ரூபாயை மட்டுமே கட்டணமாக பெற்றவர் மக்கள் டாக்டர் திருவேங்கடம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் எளிய மக்களின் உயிர் காக்கும் அன்பிற்குரிய மருத்துவராக விளங்கிய திருவேங்கடம் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் என்றும் அவர் கூறியுள்ளார். இதேபோல பல்வேறு தலைவர்களும் மருத்துவர் திருவேங்கடம் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: