ஸ்வர்மா திட்டத்தில் இல்லாத பதவிக்கு 11 மாதத்துக்கு முன்பே அதிகாரி நியமனம்: தவறை உணர்ந்து பொதுப்பணித்துறை நடவடிக்கை

துறையில் உள்ள பதவிக்கு நியமனம்

சென்னை: ஸ்வர்மா திட்டத்தில் இல்லாத பதவி அல்லது பணியிடத்தில் ஒரு அதிகாரியை நியமித்து அரை லட்சத்துக்கு மேல் 11 மாதம் சம்பளம்  கொடுத்த அதிகாரிகள் திடீரென கண் விழித்ததால், தற்போது அந்த அதிகாரிக்கு இருக்கும் துறையில் பணி வழங்கி பெருமூச்சு விட்டுள்ளனர்.

தமிழக பொதுப்பணித்துறையில் ஸ்வர்மா என்ற முகமை உள்ளது. அதில்் கண்காணிப்பு பொறியாளர் என்ற பதவியே இல்லை. இது கூட தெரியாமல்  தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் 2019 செப்டம்பரில் ஸ்வர்மா எனப்படும் மாநில நீர்வள ஆதார மேலாண்மை முகமையில் செயற்பொறியாளர்  ஒருவர் பதவி உயர்வு என்ற பெயரில் அத்துறையில் கண்காணிப்பு பொறியாளராக நியமிக்கப்பட்டார்.

அவர் பதவி ஏற்க சென்றபோது தான் அதுபோன்ற பதவியும் இல்லை, செக்‌ஷனே இல்லை என்பது தெரிந்தது. காரணம், ஸ்வர்மா என்ற  மாநில  நீர்வள ஆதார மேலாண்மை முகமையில் தலைமை பொறியாளர் தலைமையில் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்  என 10 பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில், கண்காணிப்பு பொறியாளர் பணியிடம் என்று ஒன்றே இல்லை. இதனால் பதவி உயர்வு  பெற்ற அவரால் பொறுப்பு ஏற்க முடியவில்லை. இந்த பணியிடத்துக்கு உலக வங்கி அனுமதி தராததால் அவர் கடந்த 11 மாதங்களாக பணியில் சேர  முடியவில்லை.

இந்த நிலையில், கடந்த 13ம் ேததி மாநில நீர்வள ஆதார மேலாண்மை முகமை கண்காணிப்பு பொறியாளராக நியமிக்கப்பட்டவரை, 11 மாதங்களுக்கு  பிறகு மீண்டும் விருதுநகர் வைப்பாறு வடிநில கண்காணிப்பு பொறியாளராக பணியிட மாற்றம் செய்தனர்.  இந்த விவகாரம் பொதுப்பணித்துறை  வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: