தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை சரக்கு பெட்டக பரிமாற்ற முனையமாக மாற்ற திட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்பு கழகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. துறைமுக சேர்மன் ராமச்சந்திரன்,  தேசியக்கொடியேற்றி மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:  தூத்துக்குடி வஉசி  துறைமுகம் 1689 ஏக்கர் நிலப்பரப்பினை துறைமுகம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைவதற்காக ஒதுக்கியுள்ளது. துறைமுக நிலத்தில்  உரத்தொழிற்சாலை, பெட்ரோலிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, சமையல் எண்ணெய் தொழிற்சாலை, எரிவாயு தொழிற்சாலை மற்றும்  காற்றாலை உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை போன்ற தொழில் துவங்குவதற்கு பல்வேறு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.

மேலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை சரக்குபெட்டக பரிமாற்ற முனையமாக மாற்றுவதற்கு ரூ.7 ஆயிரம் கோடி திட்ட மதிப்பில் 4 பகுதிகளாக  செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: