×

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் 12 மாவட்டங்களில் நிலத்தடி நீர் திடீர் உயர்வு

சென்னை:தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கியது. இந்த பருவமழை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட  பல்வேறு மாநிலங்களில் பரவலாக பெய்கிறது. இதனால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.  அதே நேரத்தில் மற்ற பகுதிகளில் தென்மேற்கு பருவமழையின் அளவு சராசரி அளவுக்கே இருந்தது.  இதன் காரணமாக அணைகள், ஏரிகளின் நீர்  மட்டம் உயர்ந்துள்ளது. இது தொடர்பாக மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் ஆய்வு மேற்கொண்டது.  அதில் 3,238 பகுதிகளில்  உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆய்வு செய்யப்பட்டது.

தமிழகத்தில் அந்ெதந்த பகுதிகளில் சேகரிக்கப்பட்டு கணக்கிடப்பட்டது. இவ்வாறு கடந்த ஜூலை மாதம் நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் சார்பில்  நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த ஜூன் மாதத்தை ஒப்பிடுகையில், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, கரூர்,  புதுக்கோட்டை, திருப்பூர், திண்டுக்கல், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில்,  திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தர்மaபுரி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி, மதுரை,  ராமநாதபுரம், சிவங்கை, தேனி, தூத்துக்குடி, நெல்லை விருதுநகர் ஆகிய 19 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.


Tags : districts , Southwest monsoon, 12 districts, groundwater
× RELATED மே மாதத்தின் முதல் 2 வாரங்களில் ஈரோடு,...