கொடைக்கானலில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலை பகுதியில் பிரதான சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த காற்று வீசி வருகிறது. நேற்று காலை கொடைக்கானல் மேல்மலை பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையான கோசன் சாலையில் பூம்பாறை - மன்னவனூர் இடைப்பட்ட பகுதியில்  சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த கொடைக்கானல் நெடுஞ்சாலைத் துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர்.

இந்த மரம் விழுந்ததால் காலையில் மேல்மலை பகுதிகளான பூண்டி, கிளாவரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயப் பொருட்களை விவசாயிகள் கொடைக்கானல் நகர் பகுதிக்கு கொண்டு வரமுடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் மரம் வெட்டி அகற்றப்பட்டது போக்குவரத்து சீரானது.

Related Stories: