இதுவரை உடலுறுப்பு கொடை அளித்திருக்கும் அனைவர்க்கும் நன்றி. இனி அளிக்க இருக்கும் அனைவர்க்கும் நன்றி! : மு.க.ஸ்டாலின்

சென்னை : உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடம் நிலவி வரும் அறியாமையை அகற்றி, விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உடல் உறுப்பு தானம் செய்திட ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் திங்கள் 13-ஆம் நாள் சர்வதேச உடல் உறுப்பு தான தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், இன்று (13-08-2020) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:

:

இன்று உடலுறுப்பு தான நாள்.

மறைந்த பிறகும் வாழ்தல் என்பது புகழால், மக்கள் சேவையால், பொதுநலத் தொண்டால் மட்டுமல்ல உடல் உறுப்பு கொடை மூலமாகவும் சாத்தியம். கொடையில் மிக உயர்ந்தது உடலுறுப்பு வழங்குதல். அத்தகைய உடலுறுப்பு தானம் செய்வதன் மூலமாக அனைவரும் பெரும் கடமை ஆற்றலாம் என்ற ஆலோசனையை அனைவருக்கும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

இதுவரை உடலுறுப்பு கொடை அளித்திருக்கும் அனைவர்க்கும் நன்றி. இனி அளிக்க இருக்கும் அனைவர்க்கும் நன்றி!

இருக்கும் வரை உயிராய், உறவாய் ஒன்றிணைவோம்! உடல்தானம் செய்வதன் மூலம், இறந்த பின்பும் உடலாய், உணர்வாய் மீண்டும் உலகோடு ஒன்றிணைவோம்...!, என்று தெரிவித்துள்ளார்.

இதே போல் முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மூளைத் தண்டுச் சாவு அடைந்தவரின் உறுப்புகளைத் தானம் அளிப்பதின் மூலம் 8 நபர்களுக்கு வாழ்வளிக்க முடியும். எனவே, உடல் உறுப்பு தானத்தின் உன்னதத்தை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி, உடல் உறுப்பு தானம் செய்திட முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: