கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் போது கொந்தகையில் 6 அடி நீளமுள்ள மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு..!!

சிவகங்கை: கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் கொந்தகையில் மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம்  கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. அதில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் அகரத்தில் நடைபெற்ற பணியின் போது ஏற்கனவே 5 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிக்கபட்டு உள்ளன.

இதன் ஒரு உறை முக்கால் அடி உயரமும் இரண்டு அறை  அடி அகலமும் கொண்டு உள்ளது. மொத்தம் 5 உறைகள் கொண்ட கிணறு கண்டு பிடிக்கபட்டு உள்ளது. ஏற்கனவே அகரத்தில் சிறிய பனைகள், நத்தை ஓடுகள், சங்கு வளையல்கள், தங்க நாணயங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளது. இந்த பகுதி  மக்கள் வசிப்பிடமாக இருந்து வந்ததாகவும் அதன அடிப்படையில் அகரத்தில் பணிகள் மேற் கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் கொந்தகையில் மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 6 அடி நீளமுள்ள மனித எலும்புக்கூடு முதல்முறையாக முழு அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆர்வத்தை தூண்டியுள்ளது.

Related Stories: