பெண்களுக்கு சொத்துரிமை வழங்குவது குறித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பிற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு...!!

சென்னை: பெண்களுக்கு சொத்துரிமை வழங்குவது குறித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பிற்கு துணை  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் ஆண்களைப் போலவே பெண்களுக்கு சொத்துரிமையில் சமபங்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சொத்துக்களை பிரிக்கும் போது ஆண்களைப் போலவே பெண் பிள்ளைகளுக்கும் சமபங்கு வழங்ககோரிய வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இத்தகைய தீர்ப்பினை வழங்கியிருக்கிறது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு கிளம்பி வரும் நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டது;

சமூகநீதியை நிலைநாட்டும் வகையில், உச்ச நீதிமன்றம் பூர்வீக சொத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்று வழங்கியுள்ள தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தீர்ப்பால், சமூகநீதி நிலைநாட்டப்பட்டதுடன், பெண்கள் முன்னேற்றத்திற்கு இது மேலும் வலுசேர்ப்பதாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: