சென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 96,466 ஆக அதிகரிப்பு : சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,328!

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆயினும் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,10,121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 96,466 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், 2,327 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,328 ஆக குறைந்துள்ளது.

சென்னையில் 59.04% ஆண்களும் 40.96% பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேறறு(10.08.2020) மட்டும், 12,387 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட்11) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

மண்டல வாரியாக குணமடைந்தவர்கள் விவரம்

1    திருவொற்றியூர்    3,468

2     மணலி        1,696

3     மாதவரம்        3,178

4     தண்டையார்பேட்டை    9,218

5     ராயபுரம்        10,871     

6     திருவிக நகர்        7,748    

7     அம்பத்தூர்        5,410  

8     அண்ணா நகர்    11,092     

9     தேனாம்பேட்டை    10,447

10     கோடம்பாக்கம்    11,136     

11     வளசரவாக்கம்    5,407  

12     ஆலந்தூர்        3,113  

13     அடையாறு        6,983

14     பெருங்குடி        2,814   

15     சோழிங்கநல்லூர்    2,307   

16     இதர மாவட்டம்    1,578.

மண்டல வாரியாக  சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை

1   திருவொற்றியூர்    384

2     மணலி        103

3     மாதவரம்        519

4     தண்டையார்பேட்டை    664

5     ராயபுரம்        821

6     திருவிக நகர்        737

7     அம்பத்தூர்        1,619

8     அண்ணா நகர்    1,214

9     தேனாம்பேட்டை    713

10     கோடம்பாக்கம்    1,433

11     வளசரவாக்கம்    781

12     ஆலந்தூர்        548

13     அடையாறு        839

14     பெருங்குடி         485

15     சோழிங்கநல்லூர்    454

16     இதர மாவட்டம்    14 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: