அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க கோரிக்கை..!! அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்!!!

சென்னை:  அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து பல தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இதற்கிடையில் அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தொலைக்காட்சிகள் மூலம் வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது கொரோனா காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருந்தாலும், பல தனியார் பள்ளிகளில் 90 சதவீதம் மாணவர்கள் சேர்க்கையை நடத்தி முடித்திருப்பதாக  தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல  கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைய வாய்ப்புள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறையாமல் இருக்க, மாணவர்கள் சேர்க்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: