இலங்கை தாதா அங்கொட லொக்கா தொடர்புகள் குறித்து மதுரை விமான நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி. குழு விசாரணை..!!

மதுரை: கோவையில் காதலியால் கொல்லப்பட்ட இலங்கை தாதா அங்கொட லொக்காவின் தொடர்புகள் குறித்து மதுரையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கோவையில் இருந்து காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான 4 பேர் கொண்ட போலீசார் மதுரை சென்றுள்ளனர். மதுரை விமான நிலையத்திற்கு சென்றுள்ள அவர்கள், குடியேற்றத்துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விமான நிலையத்துக்கு அங்கொட லொக்கா வந்து சென்றாரா என்பதை கண்டறிய அங்குள்ள சி.சி.டி.வி. பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்கிறார்கள்.

கடந்த 2017ம் ஆண்டு முதல் விமான நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை அவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் அங்கொட லொக்காவுக்கு மதுரையில் உள்ள தொடர்புகள் குறித்தும் போலீசார் விசாரிக்கிறார்கள். இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நிழல் உலக தாதா அங்கொட லொக்கா கோவையில் தனது காதலியால் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக அவரது காதலி அம்மானி தான்ஞி, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் அங்கொட லொக்கா சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி இருந்தது, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது தொடர்பாகவும் போலீசார் விசாரணையை முடிக்கிவிட்டுள்ளனர்.

Related Stories: