சென்னை மணலியில் மீதமுள்ள அமோனியம் நைட்ரேட்டை ஓரிரு நாட்களில் அப்புறப்படுத்தப்படும்' - மாநகர ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

சென்னை:  சென்னையில் மணலி கிடங்கில் மீதமுள்ள 540 டன் அமோனியம் நைட்ரேட் ஓரிரு நாட்களில் அப்புறப்படுத்தப்படும் என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மணலியில் உள்ள வேதிப்பொருள் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 697 டன் அமோனியம் நைட்ரேட்டிலிருந்து முதற்கட்டமாக நேற்று 10 கன்டெய்னர்களில் 202 டன் அமோனியம் நைட்ரேட் ஐதராபாத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள 540 டன் அமோனியம் நைட்ரேட்டானது 27 கன்டெய்னர்களில் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் மணலியில் உள்ள வேதிக்கிடங்கில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து தீயணைப்பு மற்றும் சுங்கத்துறையினரிடம் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்து ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரித்துள்ளார். எனவே பொதுமக்கள் யாரும் இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.

Related Stories: