தனுஷ்கோடி அருகே கரை ஒதுங்கிய இரும்பு உருளை: மரைன் போலீசார் விசாரணை

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய இரும்பு உருளை குறித்து மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி தெற்கு கடல் பகுதி முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் பெரிய இரும்பு உருளை ஒன்று நேற்று கரை ஒதுங்கி கிடந்தது. அப்பகுதி மீனவர்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு சென்ற ராமேஸ்வரம் மரைன் போலீசார் இரும்பு உருளையை கைப்பற்றினர். துருப்பிடித்த நிலையில் காணப்பட்ட உருளை வேதியியல் திரவம் அல்லது எரிபொருள் சேகரித்து வைக்கும் டேங்க் போல் காணப்பட்டது.

ஏதாவது கப்பல்களில் இருந்து கடலில் தவறி விழுந்து நீண்ட நாட்கள் கழித்து கடல் நீரோட்டத்தில் இழுந்து வரப்பட்ட உருளை இங்கு வந்து ஒதுங்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இரும்பு உருளை குறித்தும், வேறு ஏதேனும் பொருட்கள் கடலில் மிதந்து வந்து கரை ஒதுங்கியதா என்பது குறித்தும் மரைன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: