காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கலைஞர் 2ம் ஆண்டு நினைவு அஞ்சலி: 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நிவாரண உதவி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்கள், திமுக தொண்டர்கள் இல்லங்கள் முன்பு அலங்கரிக்கப்பட்ட கலைஞர் உருவப்படத்துக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். மாவட்டத்தில் 35க்கும் மேற்பட்ட இடங்களில் தலா 150 பேர் என 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முன்னாள் திமுக தலைவர் கலைஞர் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. காஞ்சிபுரம் எம்பி சிறுவேடல் ஜி.செல்வம், எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் சாலவாக்கத்திலும், உத்திரமேரூர் ஒன்றிய திமுக மற்றும் மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் உத்திரமேரூரிலும், திருப்புலிவனத்தில் கிளை நிர்வாகிகள் சார்பிலும் கலைஞர் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் காஞ்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அங்கு கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்த 150 பேருக்கு உணவு மற்றும் அரிசி உள்ளிட்ட நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ரங்கசாமி குளம், காஞ்சிபுரம் நகர அலுவலகம், நீதிமன்ற வளாகம் ஆகிய பகுதிகளிலும் அன்னதானம் மர்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

வாலாஜாபாத் பேரூர் திமுக சார்பில் வாலாஜாபாத், மதுராந்தகம் திமுக சார்பில் மதுராந்தகம், லத்தூர் ஒன்றிய திமுக சார்பில் செய்யூர், சித்தாமூர் ஒன்றிய திமுக சார்பில் சித்தாமூரிலும் கலைஞர் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், பொதுக்குழு உறுப்பினர் செங்குட்டுவன், காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் பி,எம்,குமார், குமணன், ஞானசேகரன், சத்தியசாய், ராமச்சந்திரன், சேகர், டி,குமார், தம்பு, சரவணன், ஏழுமலை, பேரூர் செயலாளர்கள் பாரிவள்ளல், பாண்டியன். எஸ்,இனியரசு. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக், துணை அமைப்பாளர்கள் யுவராஜ்.

பெ.மணி, டாக்டர் சோபன்குமார், எழிலரசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர்  அபுசாலி, துணை அமைப்பாளர்கள் ஏ.வி.சுரேஷ்குமார், ராம்பிரசாத், வழக்கறிஞர் அணி கார்த்திகேயன், பார்த்தசாரதி, சிவக்குமார், மகளிர் அணி செல்வி, நெசவாளர் அணி அன்பழகன், தொண்டர் அணி சுகுமாரன், மாநில வர்த்தக அணி செயலாளர் வி.எஸ்,ராமகிருஷ்ணன், நகர அவைத்தலைவர் சந்துரு, துணைசெயலாளர்கள் கருணாநிதி ஜெகன்னாதன், கன்னியம்மாள் தேவராஜ். பொருளாளர் வெங்கடேசன் மற்றும் எஸ்கேபி சீனிவாசன், கமலக்கண்ணன், எஸ்கேபி கார்த்திக், நெசவாளர் அணி தமிழ்ச்செல்வன், மலர்மன்னன், சுரேஷ்,  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கலைஞருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதேபோன்று புதுப்பட்டினம் ஊராட்சி திமுக சார்பில் தாஜூதீன் தலைமையில் கலைஞருக்கு மலர் அஞ்சலி செலுத்தி நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பக்கீர் முகமது, இளைஞர் அணி அப்துல் மாலிக் உள்பட பலர் கலந்துகோண்டு மலர் அஞ்சலி செலுத்தினர். திமுக பிரமுகர் தாமோதரன், அம்சா தாமோதரன், தமின், சம்சுகனி, முரளி, கண்ணன், சாமுவேல் உள்ளிட்ட பலர் மலர் அஞ்சலி செலுத்தி நிவாரணப் பொருள்கள் வழங்கினர்.  செங்கல்பட்டு: செங்கல்பட்டு ராட்டிண கினறு அருகில், நகர திமுக செயலாளர் எஸ்.நரேந்திரன் தலைமையில், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதணன் கலந்து கொண்டு முன்னாள் திமுக தலைவர் கலைஞர் படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட  நகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு  சீருடை, பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்களுக்கு அரிசி, 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார். தொடர்ந்து கலைஞரின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் திருவள்ளுவன், ராஜி, முனுசாமி, மண்ணு, திமுக விவசாய அணி ஒன்றிய அமைப்பாளர் ஆப்பூர் சந்தானம், இளைஞர் அணி நிர்வாகிகள் சந்தோஷ், அல்தாப், வர்த்தக அணி நிர்வாகி செல்வமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் செங்கல்பட்டு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட  நீதிமன்றத்தில் கலைஞர் படத்துக்கு, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஆர்.கனகராஜ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஆப்பூரில் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் ஆப்பூர் சந்தானம், ஆத்தூரில் முன்னாள் ஊராட்சி தலைவர் சுந்தரி சுப்பிரமணியம், திம்மாவரம் ஊராட்சியில் அருள்தேவி, வெங்கடாபுரத்தில் தருமன் ஆகியோரது தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தி, நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கப்பட்டது. ஆகியோர் தலைமையில் அஞ்சலிசெலுத்தப்பட்டது. சிங்கபெருமாள் கொயில் ஊராட்சி செயலாளர் கே.பி.ராஜன், மறைமலைநகரில் திமுக நகர செயலாளர் ஜெ.சண்முகம் தலைமையில் கலைஞரின் படத்திற்கு 21 வட்ட செயலாளர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு வழங்கினர்.

செங்கல்பட்டு  அடுத்த பரனூரில் உள்ள அரசு தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்லத்தில் 1000 பேருக்கு, காஞ்சி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட இளைஞரணி செயலாளர் எம்.கே.டி.கார்த்திக் தலைமையில் முகக்கவசம், சானிடைசர், அன்னதானம் வழங்கப்பட்டது.செய்யூர்: மதுராந்தகம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் திமுக தலைவர் கலைஞர் 2ம் ஆண்டு நினைவு தினத்தில், மதுராந்தகம் எம்எல்ஏ புகழேந்தி கலந்துகொண்டு, அவரது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், மதுராந்தகம் ஒன்றிய செயலாளர் தரன், மாவட்ட பிரதிநிதி கிணார் அரசு, மாணவரணி ஒன்றிய அமைப்பாளர் முத்தையா, ஊராட்சி கிளை செயலாளர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அகரம் ஊராட்சி கயநல்லூர் கிராமத்தில் சித்தாமூர் திமுக ஒன்றிய செயலாளர் ஏழுமலை தலைமையிலும், லத்தூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் ராஜ்குமார், கருணாகரன் ஆகியோர் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினர்.

வெளிக்காடு கிராமத்தில் மாவட்ட துணைச் செயலாளர் ஏழுமலை தலைமையிலும், பவுஞ்சூர் ஊராட்சி முன்னாள் தலைவர் இயேசுதாஸ் தலைமையிலும் நிர்வாகிகள் நிவாஸ் பாக்கியராஜ், விக்டர் இம்மானுவேல் அஞ்சலி செலுத்தினர். இடைக்கழிநாடு பேரூராட்சி செயலாளர் இனியரசு தலைமையில், அஞ்சலி செலுத்தி, கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர்.

Related Stories: