ஐந்தாவது நாளாக 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு: ஒரே நாளில் 5,880 தொற்று, மொத்த பாதிப்பு 2,85,024

சென்னை: தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:  தமிழகத்தில் நேற்று மட்டும் 67,352 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 5,880 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 984 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 85 ஆயிரத்து 024 ஆக உயர்ந்துள்ளது.  நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 3,445 பேர் ஆண்கள். 2,435 பேர் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இதுவரை 1 லட்சத்து 72 ஆயிரத்து 334 ஆண்கள், 1 லட்சத்து 12 ஆயிரத்து 663 பேர் பெண்கள், 27 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும் 6,488 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.  தற்போது வரை 2 லட்சத்து 27 ஆயிரத்து 575 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 52,759 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 119 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,690 ஆக உயர்ந்துள்ளது.

66 நாட்களுக்கு பின் சென்னையில் ஆயிரத்துக்கு கீழ் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்த நிலையில் மற்ற மாவட்டத்தை காட்டிலும் சென்னையில் பாதிப்பு அதிகமாக இருந்தது. அதன்பிறகு சென்னையில் ஒரளவுக்கு கட்டுக்குள் வந்த நிலையில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகமானது. மேலும் சென்னையில் கடந்த ஜூன் 2ம் தேதி 806 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஜூன் 3ம் தேதி முதல் 1,012 பேர் என பாதிப்பு ஆயிரத்துக்கு மேல் அதிகரித்து வந்த நிலையில் நேற்று 7ம் தேதி 984 என 66 நாட்களுக்கு பிறகு ஆயிரத்துக்கு கீழ் தொற்று குறைந்துள்ளது.

Related Stories: