மணப்பாக்கத்தில் 10.19 ஏக்கர் பரப்பில் காசாகிராண்ட் ‘UTOPIA’ அடுக்குமாடி குடியிருப்பு

சென்னை: தென்னிந்தியாவின் முன்னணி கட்டுமான நிறுவனமான காசாகிராண்ட் ‘காசாகிராண்ட் UTOPIA’ என்ற புதிய அடுக்குமாடி குடியிருப்பை மணப்பாக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் மெட்ரோ நிலையங்களை அருகில் கொண்ட இக்குடியிருப்பு 80க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களை கொண்டு வடிவமைக்கப்பட உள்ளது. இக்குடியிருப்பில் ஒரு சதுர அடியின் விலை ரூ.4999 ஆகும். 10.19 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த குடியிருப்பில் 673 அபார்ட்மென்ட்கள் கட்டப்பட உள்ளன.

இவை 2, 3 மற்றும் 4 படுக்கை அறை வசதிகளை கொண்டவையாகும். இந்த குடியிருப்பு 60 சதவீத திறந்தவெளி இடவசதியை கொண்டிருக்கும். 991 சதுர அடி முதல் 4144 சதுர அடி வரை கட்டப்பட உள்ளது. 35 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்டமான கிளப் ஹவுஸ், முதியவர்களுக்கான உடற்பயிற்சி நிலையம், டிஜிட்டல் உடற்பயிற்சி மையம், ஸ்குவாஷ் கோர்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெறுகின்றன. குழந்தைகளுக்கான பல்வேறு சிறப்பு வசதிகள் 3 அடுக்கு பாதுகாப்புடன் அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து இந்நிறுவன தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ஈஸ்வர் கூறுகையில், ‘இந்த குடியிருப்பு அடுத்த 24 மாதத்தில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு casagrand.co.in என்ற இணையத்தை தொடர்புகொள்ளலாம்,’ என்றார்.

Related Stories:

>