வேறு நோய்களின் தொற்று காரணமாகவே தமிழகத்தில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: வேறு நோய்களின் தொற்று காரணமாகவே தமிழகத்தில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. நேற்று மட்டும் 108 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் 5,063 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தமிழகத்தில் ஒட்டு மொத்த பாதிப்பு 2,68,285 ஆக உயர்ந்துள்ளது. ஒரு நாளில் மட்டும் 6,501 பேர் குணமடைந்தனர்.

இது நேற்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைய விட குறைவு. மாநில அளவில் 2,08, 784 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனையில் 55,152 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதே சமயம் வருத்தமளிக்கும் வகையில் நேற்று 108 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 25 பேரும், அரசு மருத்துவமனையில் 65 பேரும் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்; தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மட்டும் உயிரிழப்பவர்கள் 10% பேர் தான். வேறு நோய்களின் தொற்று காரணமாகவே தமிழகத்தில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முதல்வர் எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மருத்துவ தொகுப்பில் கபசுர குடிநீர், மல்டி வைட்டமின், ஜிங் உட்பட நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கப்படுகிறது. வெளிப்படைத் தன்மையுடன் தகவல்கள் பகிர்வதால் தான் எண்ணிக்கை அதிகாமாக தெரிகிறது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். லேசான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்காப்பட்டவர்களில் இதுவரை 2 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் கூறினார்.

Related Stories:

>