குவைத்தில் உள்ள தமிழக தொழிலாளர் பட்டியலை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வெளிநாடுவாழ் தமிழர்கள் நல சங்கத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கொரோனா காரணமாக குவைத் நாட்டில் சிக்கி தவிக்கும் 2 ஆயிரம் தமிழக தொழிலாளர்களை மீட்டு கொண்டு வர வேண்டும். மேலும் தற்போதைய நிலையில் அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து, தங்குமிடம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வழங்கிட அங்கு இருக்கும் இந்திய தூதரகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிடப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, கொரோனா நோய் தொற்று காரணத்தினால் குவைத் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழக தொழிலாளர்களின் நிலவரம் என்ன என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவர்கள் தொடர்பான விவரங்கள் அடங்கிய பட்டியலை அடுத்த ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். இதில் முந்தைய விசாரணையின் போது மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: