சென்னையில் ஊரடங்கு காரணமாக மனைவியுடன் ஆடு திருடிய நபர் கைது!!!

சென்னை:  சென்னையில் ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் கர்ப்பிணி மனைவியுடன் ஆடு திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் சமீப காலமாக கொள்ளைகள் அதிகளவு நடைபெற்று வருகின்றன. ஊரடங்கு காரணமாக வேலை இழந்த இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் ஆடு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது சென்னை தண்டையார்பேட்டையில் கார்த்தி என்பவர் வசித்து வருகிறார்.

தற்போது  இவர் ஊரடங்கு காரணமாக மனைவியுடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். சென்னை எண்ணூர் மீனவ கிராமங்களில் ஆடுகள் காணாமல் போவதாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி இருவரும் சாலையில் இருந்த ஆடுகளை வண்டியில் எடுத்து சென்றுள்ளனர். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து அவர்களை காவல் துறையினரிடம் ஒப்படைந்தனர். பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில் கார்த்தி ஸ்விகி நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், அவரது மனைவி ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்ப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் ஊரடங்கு காணமாக வேலை இல்லாததால் கர்ப்பிணி மனைவியுடன் ஆடுகளை திருடி விற்பனை செய்தது தெரியவந்தது.  இதனையடுத்து நிறைமாத கர்ப்பிணியான பெண்ணை மனிதாபிமான அடிப்படையில் அவர்களது உறவினர் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, கார்த்திக்கை மட்டும் எண்ணூர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: