ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டதை எதிர்த்து ஜெ.தீபா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டதை எதிர்த்து ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்தியுள்ள தொகையில் வருமான வரி நிலுவையை வசூலிக்கவும் தடைகோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். வேதா இல்லத்தின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தில் அவர் பயன்படுத்திய அசையும் சொத்துக்களின் விவரங்களை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது. அரசுடைமையாக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் 4 கிலோ 372 கிராம் தங்கம் இருப்பதாகவும், 601 கிலோ வெள்ளி பொருட்கள் உள்பட மொத்தம் 32,721 பொருட்கள் உள்ளன என்று தெரிவித்து உள்ளது.தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜெயலலிதா வீட்டில் 38 ஏசி, 11 டிவி, 10 பிரிட்ஜ் ஆகியவை உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: