தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை விமான நிலைய ஊழியர்கள் போராட்டம்

சென்னை: இந்தியாவில் லாபத்தில் இயங்கும் விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள தொழிலாளர் அமைப்புகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள், அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், கடும் எதிர்ப்புகளையும் மீறி திருச்சி, இந்தூர், அமிர்தசரஸ், ராய்ப்பூர், வாரணாசி, புவனேஸ்வர் ஆகிய 6 விமான நிலையங்களையும் தனியார்மயமாக்க முடிவெடுத்து அதற்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளது.

இதை கண்டித்து நேற்று சென்னை விமானநிலைய இயக்குநர் அலுவலகம் முன்பு விமான நிலைய ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து கருப்பு பட்டை அணியும் போராட்டம், மனித சங்கிலி, மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம், அடையாள உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு அறப்போராட்டங்கள்  நடத்த முடிவெடுத்துள்ளதாக இந்திய விமானநிலைய தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் இணைப்பு சங்கங்கள் தென்மண்டல செயலாளர் ஜார்ஜ் கூறினார்.

Related Stories: