சென்னையில் உள்ள 9 மண்டலங்களிலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் குறைவு: மாநகராட்சி தகவல்

சென்னை: தண்டையார்பேட்டை மற்றும் ராயபுரம் மண்டலங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தினசரி 6 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுவருகிறது. சென்னையில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. தினசரி ஆயிரம் பேருக்கும் மட்டுமே சென்னையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் ஜூலை 29ம் தேதி வரை 97,575 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 2076 பேர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்துள்ளனர். 82,764 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 12,735 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் திருவொற்றியூர் மண்டலத்தில் 398 பேர், மணலியில் 132 பேர், மாதவரத்தில் 578 பேர், தண்டையார்பேட்டையில் 602 பேர், ராயபுரத்தில் 806 பேர், திருவிக நகரில் 1,137 பேர், அம்பத்தூரில் 1198 பேர், அண்ணா நகரில் 1,453 பேர், தேனாம்பேட்டையில் 1,013 பேர், கோடம்பாக்கத்தில் 1734 பேர், வளசரவாக்கத்தில் 937 பேர், ஆலந்தூரில் 578 பேர், அடையாறு மண்டலத்தில் 1,194 பேர், பெருங்குடியில் 502 பேர், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 399 பேர் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த 74 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதன்படி சென்னையில் உள்ள  9 மண்டலங்களில் ஆயிரத்திற்கு குறைவானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக தொடக்கத்தில் தொற்று அதிகமாக இருந்த தண்டையார்பேட்டையில் 578 பேரும், ராயபுரத்தில் 806 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிட்டது.

Related Stories: