சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 9வது நாட்களாக நேற்றும் அதிகரித்து சவரன் 41 ஆயிரத்தை நெருங்கியது. தங்கம் விலை கடந்த 20ம் தேதி முதல் தொடர்ச்சியாக உயர்ந்து புதிய சாதனை படைத்து வருகிறது. ஜூலை 20ம் தேதி ஒரு சவரன் ரூ.37,616, 21ம் தேதி ரூ.37,736க்கும், 22ம் தேதி ரூ.38,184, 23ம் தேதி ரூ.38,776க்கும், 24ம் தேதி ரூ.39,080க்கும், 25ம் தேதி ரூ.39,232க்கும், 27ம் தேதி ரூ.40,104க்கும் விற்பனையானது. தொடர்ந்து 8வது நாளானநேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.24 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,037க்கும், சவரனுக்கு ரூ.192 அதிகரித்து ஒரு சவரன் ரூ.40,296க்கும் விற்கப்பட்டது.