சென்னையில் 2-வது நாளாக தொடர் கனமழை...!! சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம்!!!

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2வது நாளாக கனமழை பெய்துள்ளது. தென்மேற்கு திசையில் அதிகளவு காற்று வீசுவதால் உருவான மேகங்களாலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் சென்னையில் 2வது நாளாக மழை பெய்துள்ளது. இதில், அண்ணா நகர், போரூர், வடபழனி, இராமாபுரம், கிண்டி, அடையாறு மற்றும் மயிலாப்பூர் உள்ளட்ட இடங்களில் அதிகாலை முதலே விட்டு விட்டு மழை கொட்டி தீர்த்தது. இதேபோன்று சென்னையின் புறநகர் பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதில், தாம்பரம், மேடவாக்கம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பூவிருந்தவல்லி, குன்றத்தூர், பொன்னேரி உள்ளிட்ட இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும், குரோம்பேட்டை பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, 4 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியதால் சிலர் வாகனங்களை அங்கேயே விட்டு சென்றனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றனர். இதனால் தேசிய நெடுசாலையின் கட்டுப்பாட்டில் வரும் பகுதியில் மழைநீர் செல்வதற்கு போதுமான அளவு நீர்பாலம் அமைக்கவில்லை என்று வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், சாலையின் கிழக்கு பகுதியில் தண்டவாளங்கள் அமைந்துள்ளதால், இரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து திட்டம் தீட்டினால் மட்டுமே இதற்கு முடிவு ஏற்படும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவி வரும் நேரத்தில், இதுபோன்று மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் மேலும் புதிதாக நோய்கள் உருவாக வாய்ப்பிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Related Stories: