பேசிய வார்த்தைகளை விட பேசாத மெளனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க..நடிகர் சூர்யா ட்வீட்..!!

சென்னை: சுற்றுச்சூழலை காக்க நம் மெளனம் கலைப்போம் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை விவகாரத்தில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இக்கருத்தினை பதிவிட்டுள்ளார். சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை தொடர்பாக சூர்யாவின் சகோதரர் கார்த்தி நேற்று திருக்குறளை மேற்கோள்காட்டி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், சூர்யா சிவகுமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அதில், பேசிய வார்த்தைகளை விட பேசாத மெளனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க..சுற்றுச்சூழலை காக்க நம் மெளனம் கலைப்போம் என்று கருத்து பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசு EIA எனும் புதிய திட்டத்திற்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனால் விவசாயமும் இயற்கை வளங்களும் பெரிதும் பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய சூழலியல் தாக்க மதிப்பீடு 2020ம் ஆண்டு வரைவு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரானது என பலரும் சமூக ஊடகங்களில் கருத்தாகவும், வீடியோவாகவும் பதிவிட்டு வருகின்றனர். இதனால் #TNRejectsEIA2020, #ScrapEIA ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்டாகி எல்லோரின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. ஏற்கனவே சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதுகுறித்து பதிலளித்துள்ளார். அதில் மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்ததன் பிறகு திருத்தங்களோடு இறுதி அறிக்கை வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் சுற்றுச்சூழலை காக்க நம் மெளனம் கலைப்போம் என நடிகர் சூர்யா கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: