கல்லூரி தேர்வுகள் ரத்தால் 14 லட்சம் மாணவர்கள் பயன்: உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தகவல்

சென்னை: தமிழகத்தில் கல்லூரி தேர்வுகளை அரசு ரத்து செய்ததை அடுத்து 14 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள் என்று உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் தேர்வுகளின் அடிப்படையில் புற மதிப்பீடு மற்றும் அக மதிப்பீடுகளின் கணக்கிட்டே தேர்வு முடிவுகளை அறிவிக்க உள்ளனர். சில பல்கலைக்கழகங்கள் இதற்காக ஒரு வார காலம் எடுத்துக் கொண்டுள்ளன. சில பல்கலைக்கழகங்கள் மூன்று வாரம் கால அவகாசம் கேட்டுள்ளனர். இதன்படி ஒன்று முதல் மூன்று வாரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு தேர்ச்சி மதிப்பெண்கள் கல்லூரி மாணவர்களுக்கு போடப்படும்.

தற்போது எல்லா கல்வி நிறுவனங்களும் ஆன்லைன் கல்வியை நடைமுறைப்படுத்தி அதன்மூலம் வகுப்புகள் நடத்தி வருகின்றனர். இந்த முறையை பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பின்பற்றுவது தொடர்பாக முதல்வர் முடிவு செய்வார். குறிப்பாக இந்த ஆன்லைன் வகுப்புகள் குறித்து ஒரு சர்வே நடத்தினோம். அதில் 70% கல்லூரி மாணவர்களுக்கு இணையதள வசதி மற்றும் இணைப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. 30 சதவீத மாணவர்களுக்கு அந்த வசதி இல்லை. இதுகுறித்து நாங்கள் தமிழக முதல்வரிடம் தெரிவித்து, அதற்கான வழிமுறைகளை தமிழக முதல்வர் அறிவிப்பார் என்றும் அபூர்வா தெரிவித்துள்ளார்.

Related Stories: