காஞ்சிபுரம், கோவையை தொடர்ந்து சென்னை மாவட்ட கலெக்டர் சீதா லக்ஷ்மிக்கும் கொரோனா தொற்று உறுதி : ஐஏஎஸ் அதிகாரிகள் அதிர்ச்சி!!

சென்னை: தமிழகத்தில் இதுவரை 4 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் காஞ்சிபுரம், கோயமுத்தூர் மாவட்ட கலெக்டர்களை தொடர்ந்து சென்னை மாவட்ட கலெக்டர் சீதா லக்ஷ்மிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக களத்தில் நின்று போராடும் முன்கள பணியாளர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

அண்மையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மின்துறை அமைச்சர் தங்கமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரிகளும் கொரோனாவால் பாதித்து குணமடைந்தனர். அந்த வரிசையில் தற்போது ஐஏஎஸ் அதிகாரிகளும் இணைந்துள்ளனர்.

இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான சென்னை ஆட்சியர் சீதாலட்சுமி கிண்டி கிங் இன்ஸ்டியூட் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி , காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னை மாவட்ட ஆட்சியரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

Related Stories: