ஒட்டன்சத்திரத்தில் பலா சீசன் தொடக்கம்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பலா சீசன தொடங்கியுள்ளதால், வியாபாரிகளும் அதிக  கொள்முதல் செய்து வருகின்றனர்.ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் கண்ணணூர், புலிக்குத்திக்காடு உள்பட 14 மலை கிராமங்களில் விவசாயிகள் பலா விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது பலா சீசன் தொடங்கியுள்ளது. பலா மரங்களில் பலாக்காய்கள் கொத்து கொத்தாக காய்த்து தொங்குகிறது. பலா சீசன் சித்திரை மாதம் தொடங்கி, வைகாசி, ஆனி, ஆடி ஆகிய மாதங்கள் வரை விளைச்சல் இருக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது ஒரு பலா ரூ.150 முதல் ரூ.250 வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், பழனி, மதுரை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் இயற்கையாக பலாப்பழங்கள் விளைவதால் நல்ல சுவை கிடைப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்….

The post ஒட்டன்சத்திரத்தில் பலா சீசன் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: