ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை: காதலிக்கு கண்ணீர் கடிதம்

சென்னை: டி.பி. சத்திரம் பகுதியை சேர்ந்தவர் நித்திஷ்குமார் (20), தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். அமைந்தகரை அம்மன் கோயில் அருகே உள்ள மனித உடலில் டாட்டூ குத்தும் கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து அமைந்தகரையில் வேலை பார்க்கும் கடைக்கு சென்றுள்ளார். நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை என்றும்

நித்திஷ்குமார் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோதும் போனை எடுக்கவில்லை. இதனால் அவரது தம்பி கடைக்கு வந்து பார்த்தபோது நித்திஷ்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிச்சியடைந்தார்.

இதுகுறித்து, அமைந்தகரை போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் நித்திஷ்குமார் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் அவர் எழுதிய

உருக்கமான கடிதம் கிடைத்தது. அதில் எழுதியதாவது. ‘‘நான், “கேஸ்டோ கிளப் என்கிற ஆன்லைன் விளையாட்டு விளையாடி வந்தேன். அதில் நான் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொள்கிறேன். என் முடிவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் மிகவும் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணம் எல்லாம் ஆன்லைன் விளையாட்டில் தோற்று விட்டேன். கடையில் இருந்தும் ரூ.20 ஆயிரம் எடுத்து விளையாடி தோற்றுவிட்டேன். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன். அம்மா, அப்பா உங்களை எனக்கு ரொம்ப, ரொம்ப பிடிக்கும் மன்னிச்சிடுங்க. அதன் பிறகு சத்யா என்னோட காதலி, என் உயிரே எல்லாமே அவதான். என்னை மன்னிச்சிரு சத்யா” என எழுதியிருந்தது.

Related Stories: