2 மகள்களின் கல்வி செலவை ஏற்கிறேன்: ஆந்திர விவசாயிக்கு டிராக்டர் வாங்கிகொடுத்த நடிகர் சோனு சூட்டுக்கு சந்திரபாபு நாயுடு பாராட்டு...!!!

திருமலை: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளி மண்டலம் கே.வி.பள்ளியை சேர்ந்தவர் விவசாயி நாகராஜ், கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு டிராக்டருக்கு வாடகை செலுத்த முடியாமல் தனது 2 மகள்களை வைத்து ஏர் உழுதார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியானது.

இது குறித்து பாலிவுட் நடிகர் சோனுசூட் தனது டிவிட்டரில், வயலில் உழவு செய்தவதற்கு விவசாயிக்கு இரு உழவுமாடுகளை தானமாக அளிப்பதாகவும், தந்தைக்கு உதவி செய்த பெண்களை படிப்பில் கவனம் செலுத்துமாறும் கூறியிருந்தார். ஆனால் உழவுமாடுகளுக்கு பதிலாக நடிகர் சோனு சூட், டிராக்டர் வாங்கி தந்துள்ளார். நேற்று மாலை விவசாயியிடம் அந்த டிராக்டர் ஒப்படைக்கப்பட்டது. மேலும், நாகராஜை போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

இந்நிலையில், விவசாயிக்கு புதிய டிராக்டர் ஒன்றையும் அனுப்பிவைத்து உதவிய நடிகர் சோனு சூட்டுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகேஷ்வரராவின் குடும்பத்திற்கு டிராக்டரை அன்பளிப்பாக வழங்கி சிறந்த முயற்சியை எடுத்துள்ள சோனுஜியை தொடர்புகொண்டு பேசி பாராட்டினேன். இந்தக் குடும்பத்தின் நிலையை உணர்ந்து, இரண்டு மகள்களின் கல்விக்குப் பொறுப்பேற்று, அவர்களின் கனவு நனவாக உதவி செய்வேன் பதிவிட்டுள்ளார்.

Related Stories: