பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களை இணையத்தில் பதிவேற்ற 31ம் தேதி வரை அவகாசம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை: பட்டா மாறுதல் சம்மந்தமான மனுக்களை நேரடியாக வழங்குவதை தவிர்த்து, இணையம் மற்றும் இ-சேவை மையங்கள் மூலம் பதிவேற்றம் செய்வது வரும் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாவட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட 6 வட்டங்களுக்கு மட்டும் 1429ம் பசலிக்கான வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியராலும், மதுரவாயல்  வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலராலும், திருவொற்றியூர், அம்பத்தூர், ஆலந்தூர் மற்றும் மாதவரம் ஆகிய வட்டங்களில் சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர்களாலும் ஜூன் 29ம் தேதி முதல் தொடங்கி 30ம் வரை நடத்தப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பட்டா மாறுதல் மற்றும் பொது மக்களின் இதர கோரிக்கைகள் சம்மந்தமான மனுக்களை கண்டிப்பாக நேரடியாக வழங்குவதை தவிர்த்து gdp.tn.gov.in/jamabandhi என்ற இணையம் மூலமாகவோ அல்லது இ-சேவை மையங்கள் மூலமாகவோ ஜூன் 29ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி  வரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது கடைசி தேதி ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் சம்மந்தமான மனுக்களை 31ம் தேதி வரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: