கிராம நிர்வாக அலுவலர்களிடம் மாற்றுத் திறனாளிகளுக்கு 1000: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை. ஊரடங்கு காலத்தில், தமிழக முதல்வர் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் நிவாரணதொகையாக தலா 1000, வழங்குமாறு ஆணையிட்டார். இதைதொடர்ந்து கடந்த மாதம் 26ம் தேதி முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் வாயிலாக கிராம நிர்வாக அலுவலர்களை அனைத்து மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று அடையாள அட்டை நகல் பெற்று, அசல் அட்டையில் பதிவு செய்து நிவாரணத் தொகை 1000 வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது வரை நிவாரண தொகை பெறாத மாற்றுத் திறனாளிகள், உடனடியாக கிராம நிர்வாக அலுவலரிடம் அடையாள அட்டை நகல் கொடுத்து விண்ணப்பிக்கலாம்.வெளி மாவட்ட மாற்றுத் திறனாளிகள், தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்தால், தங்களது அடையாள அட்டையின் நகலுடன் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.

Related Stories: