தமிழகத்தில் முதன் முறையாக கணினி வழி சிபிஎஸ்இ தேர்வில் பார்வையற்ற மாணவி வெற்றி

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் ஜவகர் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறன் மாணவி ஓவியா சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வை கணினி வழியில் எழுதி 500க்கு 447 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பார்வை குறைபாடுள்ள மாணவர்கள் கணினி வழியாக தேர்வுகளை எழுதலாம் என சிபிஎஸ்இ அனுமதியளித்த நிலையில், தமிழகத்தில் கணினி வழியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வெற்றி பெற்ற முதல் பார்வையற்ற மாற்றுத்திறன் மாணவி என்ற பெருமையை ஒவியா பெற்றுள்ளார்.

இவரது தந்தை விஜயராஜ் என்எல்சி பொறியாளர். தாய் கோகிலா. இதுகுறித்து மாணவி ஓவி யா கூறுகையில், என் மகிழ்ச்சிக்கு காரணமாக இருந்த எனது பெற்றோர், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், சிபிஎஸ்இ நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். என்னை போல பார்வை திறனற்ற மாணவர்களும் கணினி வழித் தேர்வு எழுத முயற்சி செய்ய வேண்டும் என்றார். மேலும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்வதே லட்சியம், என்றார்.

Related Stories: