பெரியகுப்பம் காவலர் குடியிருப்பில் கழிவுநீரால் கொசு உற்பத்தி: நோய் பரவும் அபாயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியகுப்பம் பகுதியில் திருவள்ளூர் டவுன், திருவள்ளூர் தாலுகா, மணவாளநகர், கடம்பத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இக்குடியிருப்புகள், 1999ம் ஆண்டு, அக். 20ம் தேதி திறக்கப்பட்டன. இங்கு, மூன்று இன்ஸ்பெக்டர்கள், 12 எஸ்.ஐக்கள் மற்றும், 120 போலீசார் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இந்த காவலர் குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் வெளியேற வசதியாக கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கால்வாய்களை தினசரி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் வந்து சீர் செய்ய வேண்டும்.

ஆனால், நகராட்சி ஊழியர்கள் காவலர் குடியிருப்பு பகுதிக்கு வருவதில்லை. இதனால், கழிவுநீர் கால்வாய்களில் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால், கழிவுநீர் வெளியேற முடியாமல் குடியிருப்புகளின் வெளியே குட்டையாக தேங்கிக் கிடக்கிறது. குடியிருப்பில் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் குடியிருப்புகளில் வசிப்பவர்கள், தங்களது வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைத்துள்ளனர்.  கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும் அபாயமும் இவர்களுக்கு உள்ளது.

Related Stories: