கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்கும் பணிகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்கும் பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்ப் பரவலை தடுப்பதற்காக மக்களாகிய நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தால், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் இந்நேரம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு  இருக்கும். அந்த சாதனை நிகழ்த்தப்படாததற்கான காரணம் பொதுமக்களாகிய நமது ஒத்துழைப்பின்மை தான்.

தமிழக அரசு கொரோனா தடுப்புக்காக அதனால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. ஒரு கை தட்டினால் ஓசை வராது; இரு கைகளையும் தட்டினால் தான் ஓசை எழும் என்பதை மக்கள் உணர வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரை மக்கள் தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா பரவலைத் தடுக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அதன்மூலம் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலுமாக ஒழிக்கும் பணிகளுக்கு துணை நிற்க வேண்டும்.

தமிழக அரசும் பாதுகாப்பு விதிகளை மக்கள் முழுமையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய, ஜார்க்கண்ட் மாநிலத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதைப் போன்று, தமிழகத்திலும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: