கொரோனா தடுப்பூசி கோவாக்சின் செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளதாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி..!!

சென்னை: கொரோனா தடுப்பூசி கோவாக்சின் செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளனர் என்று எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் பெரும்பாலான நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், தற்பொழுது இதற்கான தீர்வாக பல நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனையும் நடைபெற்று வருகின்றன.

உலக நாடுகளில், அதுவும் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, சீனா, பிரேசில் போன்ற வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் இந்தியாதான் தடுப்பூசி துறையில் எப்போதும் முன்னிலை வகிக்கிறது என்பது கொரோனாவிலும் நிரூபணம் ஆகப்போகிறது. அந்த வகையில் நமது நாட்டிலேயே நம்பகமான ஒரு தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் (NIV) ஆகியவற்றுடன் இணைந்து கோவாக்ஸின் என்ற கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.

கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள, சென்னை கட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 13 மருத்துமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, பேட்டியளித்த எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் கொரோனா தடுப்பூசி கோவாக்சின் செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளனர். கொரோனா தடுப்பூசி கோவாக்சின் பரிசோதனை சுமார் 6 மாதம் வரை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: