கழிவுநீர் கால்வாய் பாலம் கட்டுமான பணி மந்தம்

பொள்ளாச்சி: கழிவு நீர் கால்வாய்  பாலம் கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

 பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 19வது வார்டு எஸ்எஸ் கோவில் வீதியின் ஒரு பகுதி மற்றும்  ஜூப்லி கிணறு வீதி உள்ளிட்ட குடியிருப்பு மிகுந்த இடங்களில் சேதமான கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு துவங்கப்பட்டது. இதில் ஜூப்லி கிணறு வீதி அரச மரத்தடி விநாயகர் கோயில் அருகே செல்லும் கழிவுநீர் கால்வாய் ஏற்பட்ட அடைப்புகளை நீக்குவதற்காக, அதனை ஆழப்படுத்தி கான்கிரீட்டால்  சிறு ஓடை பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.  

இதற்காக அந்த பகுதியில் சுமார் 5  அடி ஆழத்துக்கு குழிதோண்டி அங்குள்ள சேறு கதி மற்றும் கற்களை கால்வாய் அருகேயே குவித்து போடப்பட்டது.

 ஆனால், சிறு ஓடை பாலம் கட்டுமான பணி சுமார் ஒரு மாதங்களுக்கு மேல் கடந்தும், இன்னும் அதனை முழுமையாக சீர்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மாற்றும் பாதையையே பயன்படுத்த வேண்டியதாக உள்ளது. மேலும், விநாயகர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். எனவே, கிடப்பில் போடப்பட்ட கழிவுநீர் கால்வாய் சிறு பாலம் பணியை விரைந்து முடித்து, மக்கள் அவதிப்படுவதை தவிர்க்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: