கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள 3 லட்சம் குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் டோர் டெலிவரி: அமைச்சர் தகவல்

சென்னை: கொரோனாவால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள 3 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். கீழ்ப்பாக்கம், லோட்டஸ் கார்டன் காவலர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்று மருத்துவ முகாமை நேரில் ஆய்வு செய்து, காவலர் மற்றும் பொதுமக்களுக்கு மாஸ்க், கபசுர குடிநீர் மற்றும் கையேடுகள் ஆகியவற்றை உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் காமராஜ் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் இதுவரை 20,576 காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் 12,51,023 பேர் பயனடைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் தான் விவசாயிகள் விளைவிக்கிற நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், நெல்லை நாம் எடுத்துக்கொண்டிருக்கிறோம்.

இந்த பருவத்தில் 28 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு நிர்ணயக்கப்பட்டது அதில் 27.5 லட்சம் மெட்ரிக் டன்னை நெருங்கிவிட்டோம், இதுவே தமிழக முதல்வர் எடப்பாடி ஆட்சியில் கொள்முதல் வரலாற்றில் பெரிய சாதனையாகும். கிட்டதட்ட 4.30 லட்சம் விவசாயிகள் பயன் பெற்று இருக்கிறார்கள். ரூ.5400 கோடி வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மத்திய அரசங்கத்திடமிருந்து சி.எம்.ஆர் மானியம் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும், அதில் உள்ள பாக்கியை தொடர்ந்து

ரேஷன் கடை ஊழியர்களின் பணி மெச்சத்தக்கது, அதாவது குவாரன்டைன் பகுதியில் கிட்டதட்ட 3 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கினர். இன்றைக்கும் வழங்கி கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு முககவசம், கையுரை போன்ற அனைத்து விதமான பாதுகாப்போடு பணிகளில் ஈடுபட வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: