வீடியோ வெளியிட்ட விவகாரம் திருத்தணிகாசலத்துக்கு மேலும் 2 வழக்கில் ஜாமீன்

சென்னை: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து இருப்பதாகவும், அதை அரசு ஏற்க மறுப்பதாகவும் கூறி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டார். இந்நிலையில், திருத்துணிகாசலம் போலியான சித்த மருத்துவர், பதிவு செய்யாதவர் என இந்திய மருத்துவத்துறை மற்றும் ஓமியோபதி கவுன்சில் சார்பில் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார், திருத்தணிகாசலத்தை கைது செய்தனர்.

பின்னர், குண்டர் தடுப்பு சட்டத்திலும், மேலும் 2 புதிய வழக்குகளிலும் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது மொத்தம் 3 வழக்குகள் இருந்தன. அதில் ஒரு வழக்கில் கடந்த வாரம் எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும் 2 வழக்குகளில் ஜாமீன் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜன், 2 வழக்குகளுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கினார். குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் விடுதலையானால் மட்டுமே அவர் சிறையிலிருந்து வெளிவர முடியும்.

Related Stories: