சென்னையின் வரலாறு திரும்புகிறது இ-பாஸ் கோரி 4.92 லட்சம் பேர் விண்ணப்பம்: 1. 61 லட்சம் பேருக்கு மட்டுமே அனுமதி; மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னை: சென்னைக்கு வர இதுவரை 4.92 லட்சம் பேர் இ.பாஸ் கோரி விண்ணப்பித்ததாகவும், அதில் உரிய காரணங்களுடன் இருந்த 1. 61 லட்சம்  பேருக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

கொரோனா காரணமாக சென்னையில் உள்ள தற்காலிக காய்கறி, மீன், இறைச்சி கடைகளில் விதிகளை பின்பற்றடுவதை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டது.  இந்த கண்காணிப்பு குழு உறுப்பினர்களுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அம்மா மாளிகையில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் தற்போது நோய் தொற்று குறைந்துள்ளது. அதனால் இறப்பு விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மூச்சு திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு பரிசோதனைக்கு காத்திருக்காமல், மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இறப்பு விகிதம் 15-20% குறையும். இதுவரை 4,92,149 பேர் சென்னைக்கு வருவதற்கு இ.பாஸ் விண்ணப்பித்தனர், அதில் 1,61,764  இ.பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சென்றவர்களால் தான் நோய் தொற்று பரவியது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. சென்னை மாநகரில், மற்ற மாநிலங்களில் இருந்து உள்ளே வருபவர்களை கண்காணிக்க 16 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஜூலை 31 பிறகு ரயில், பேருந்து உள்ளிட்டவை தளர்வு குறித்து அரசு தான் முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.

* மூன்று மாதம் பொறுத்திருக்க வேண்டும்         

சென்னையில் உள்ள அனைத்து மார்க்கெட்களையும் தாசில்தார் அளவிலான அதிகாரிகள் தினமும் ஆய்வு செய்து அறிக்கை தருகின்றனர். அனைத்து தரப்பு மக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் தொற்றை குறைக்க முடியும். பொதுமக்கள் இன்னும் 3 மாதங்களுக்கு ஒத்துழைத்தால் மட்டுமே இந்த கொரோனா போராட்டத்தில் ஒரு முற்று கிடைக்கும்.

Related Stories: