காவல் நிலையங்களில் சிசிடிவி பதிவுகளை பாதுகாக்க கோரிய மனு.: டிஜிபி பதில் தர மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு..!!

சென்னை: காவல் நிலையங்களில் சிசிடிவி பதிவுகளை பாதுகாக்க கோரிய மனு மீது டிஜிபி பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த வக்கீல் அதிசய குமாரின் புகார் மனு மீது மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிசிடிவி  கேமராக்களை பொருத்தி ஓராண்டுக்கு பதிவுகளை பாதுகாத்து வைக்க கோரி வக்கீல் அதிசய குமார் மனு தாக்கல் செய்து இருந்தார்.

தற்போது தமிழகத்தில் காவல்துறையினரால் பொதுமக்கள் தண்டிக்கப்பட்டு வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதில் அப்பாவி தெருக்கடை வணிகர்களும் பகடை காயாகி வருகின்றனர். மேலும் இதில் ஒருபடி மேலாக சிறைச்சாலையில் உயிரிழப்பு சம்பவங்களும் நேர்கின்றன.

இதற்கு சரியான எடுத்துக்காட்டான போலீசார் தாக்கியதில் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம் நாட்டையே உலுக்கி வருகிறது. இந்த சம்பவத்தில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் பொது ஆவணங்கள். அவை அனைத்தும் பாதுகாத்து வைக்கப்பட வில்லை. இந்நிலையில் காவல் நிலையங்களில் சிசிடிவி பதிவுகளை பாதுகாக்க கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சாலைகளில் எதற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவோ, அதற்கான காரணங்கள் அனைத்தும் காவல் நிலையங்களுக்கும் பொருந்தும். இனி வரும் காலங்களிலாவது காவல் நிலையங்களில் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதை உறுதி செய்வதற்கு கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட வேண்டும். காவல் நிலையங்களில் குற்றங்கள் நடப்பதைத் தடுக்க, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் பொதுவான கருத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: