சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனாவால் 18 பேர் உயிரிழப்பு: பாதிப்பு விவரங்கள் வெளியிட்டது சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனாவால் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை முன்பை விட சற்று குறைந்துள்ளது என தகவல் தெரிவித்துள்ளது. எனினும், கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கவலை அளிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனாவால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த 8 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை 3 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை தலா 3 பேரும், தனியார் மருத்துவமனைகளில் ஒருவர் என மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இதுவரை சென்னையில் 70,651 பேர் நோய்த் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர் எனவும், 15,127 பேர் தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் கொரோனா பாதித்வர்கள் மொத்த எண்ணிக்கை 87,235 பேர் என சென்னை மாநகராட்சி பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது. மேலும் நேற்று முதல் இதுவரை 13,774 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் ஆண்கள் 58.43% பேருக்கும், பெண்கள் 41.57% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என புள்ளி விவரத்தோடு பதிவிட்டுள்ளது.

Related Stories: