தமிழகத்தில் ஆகஸ்ட் 18-ம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக, சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் அதிரடி அறிவிப்பு!!!

சென்னை:  தமிழகத்தில் வருகிற ஆகஸ்ட் 18ம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தால் வரும் ஜூலை மாதம் இறுதி வரை பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால், ஏற்கனவே கொரோனா தொற்றின் காரணமாக பொருளாதாரரீதில் அனைத்து நாடுகளும் பின்தங்கி உள்ளன. இதில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தினந்தோறும் உழைக்கும் கூலி தொழிலாளர்கள்தான்.

இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு தொழில்கள் முடங்கிவிட்டன. அதில், ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்க்கையும் அடங்கியுள்ளது. அதாவது பொதுமுடக்கம் காரணமாக ஆட்டோ ஓட்டுனர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளனர். இதனால், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உரிய நிவாரணம் வழங்ககோரி வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு இந்த போராட்ட முடிவானது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் அவர்கள் விடுத்துள்ள கோரிக்கையானது, அடுத்த 6 மாதங்களுக்கு 7500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், கூட்டுறவு வங்கிகளில் ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க வேண்டும், கடனுக்கான மாத தவணையை செலுத்த வங்கிகள் நிர்பந்திக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மேலும், வாகனம் மற்றும் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க ஓராண்டு காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் ஓட்டுனர்கள்.

Related Stories: