சிறுவர்கள் விளையாட ‘பிளேயிங் ஜோன்’, மிதவை பாலம்: வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தீவிரம்

கோவை:  கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் ரூ.998 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் திட்டம், எல்.இ.டி. மின் விளக்கு, மல்டி லெவல் கார் பார்க்கிங், உக்கடம் லாரிப்பேட்டை இடமாற்றம், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம், வ.உ.சி. பூங்கா விரிவாக்கம், மாநகராட்சி கட்டுப்பாட்டில் குளங்களை அழகுப்படுத்துதல், மேம்படுத்துதல் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் குளக்கரைகளை அழகுப்படுத்துதல் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக மட்டும் ஸ்மார்ட் சிட்டி நிதியில் பெரும் தொகை செலவிடப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உக்கடம் பெரியகுளத்தில் ரூ.62 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. கரைகளை அழகாக்க, பூங்கா அமைக்க, வாக்கிங், ஸ்கேட்டிங் தளம் அமைப்பது என பணிகள் நடந்து வருகிறது. உக்கடம் பெரியகுளத்தை தொடர்ந்து வாலாங்குளத்தின் கரைகளும் ரூ.40 ேகாடி ரூபாய்க்கு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக வாலாங்குளத்தில் ரூ.23 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல், செல்வசிந்தாமணி குளத்தின் கரைப்பகுதியும் ரூ.31.47 ேகாடி செலவில் சீரமைக்கப்படுகிறது. இதனிடையே வாலங்குளத்தில் மக்களை கவரும் வகையில் சைக்கிளிங் மற்றும் ஸ்கேட்டிங் தளம் அமைக்கும் பணி வேகமாக நடக்கிறது. இது தவிர நடை பயிற்சி தளம் அமைக்கப்படவுள்ளது.

நடைபயிற்சி மற்றும் சைக்கிளிங் தளத்தில் இயற்கை பூங்கா அமைக்கப்படும். தண்ணீரில் மதந்து இருக்கும் மிதவை பாலம், சிறுவர்கள் விளையாட ‘பிளேயிங் ஜோன்’ ஏற்படுத்தப்படவுள்ளது. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்படும். இதுபோன்ற பல பொழுதுபோக்கு அம்சங்கள் வாலங்குளத்தில் அமைக்கப்பட உள்ளன. இந்த பணிகள் ஓரிரு மாதங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: