போன் செய்தால் வீடுகளுக்கு மரக்கன்று: புதுச்சேரியில் 100 யூனிட் இலவச மின்சாரம்: பட்ஜெட்டை தாக்கல் செய்து முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு...!!!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், என்னுடைய உடன்பாடு இல்லாமல் பட்ஜெட் உரை தயாரிப்பட்டிருக்கிறது. எனவே பட்ஜெட் கூட்டத்தொடரில் தான் பங்கேற்க முடியாது என்று நேற்று இரவு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அறிவித்திருந்தார். இருப்பினும் கிரண்பேடி வருகைக்காக சட்டப்பேரவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. சரியாக 9:30 மணிக்கு ஆளுநர் வருகை புரிவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிரண்பேடி வரவில்லை. இதனால், ஆளுநர் உரையை பேரவையில் ஒத்திவைப்பதற்காக வாக்கெடுப்பு நடைபெற்று நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவையை  ஒத்திவைக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு தொடங்கியது.

தொடர்ந்து, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேரவையில் 2020- 21ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ரூ.9 ஆயிரம் கோடிக்கான பட்ஜெட்டை தாக்குல் செய்து உரையாற்றிய முதல்வர் நாராயணசாமி, வறுமை கோட்டிற்கு கீழுள்ளோருக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம், குடிநீர் வழங்கப்படும் என்று அறிவித்தார். போன் செய்தால் வீடுகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படும். மாடித்தோட்டத்திற்கு 75% மானியம். புதுச்சேரியில் வேளாண் பல்கலைக்கழகம் துவங்கப்படும் என்றார். முதல்வர் நாராயணசாமியின் இந்த அறிவிப்பு புதுச்சேரி மக்கள் மத்தியில் பெரும் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: