தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பத்திர பதிவு செய்தவுடன் பட்டா மாற்றம்: பதிவுத்துறை உயர்அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. அதன் பிறகு பட்டாவை தன் பெயரில் மாற்றுவதற்குள் வாங்கியவர்கள் கடும் அவதிப்பட்டனர். இதை தவிர்க்க சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜபாத் தாலுகாவில் கடந்த 17ம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மற்ற தாலுகாக்களில் பத்திரப்பதிவு செய்த உடன் தானாக பட்டாமாறுதல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இது குறித்து பதிவுத்துறை ஊழியர் ஒருவர் கூறுகையில், ஒரே சர்வே எண்களில் சொத்துக்கள் இருந்தால், பத்திரம் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யப்பட்டு விடுகிறது. இந்த திட்டத்தின் படி, சார்பதிவாளர்கள் சொத்தை பதிவு செய்தவர்கள் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா, முழு அதிகாரம் அந்த சொத்தில் அவருக்கு உள்ளதா, அவர் மீது வேறு சொத்துக்கள் உள்ளதா, அதற்கான பட்டா இருக்கிறதா என சார்பதிவாளர்கள் ஆய்வு செய்கின்றனர். அதன் பிறகு சொத்துக்களை பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகி விடுகிறது. எனவே, ஒரு பட்டா, ஒரு சொத்துக்கு யாருடைய ஒப்புதலும் தேவையில்லை’ என்றார்.

Related Stories: