டாக்டர் எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலையில் 2020-21ம் ஆண்டுக்கான நுழைவு தேர்வு ரத்து

உலகெங்கும் தற்போது வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றால் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டும் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (MGREEE) ரத்து செய்யப்படுகிறது. பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை மாணவ, மாணவியர் +2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். மாணவ, மாணவியர் தங்களின் +2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தங்களுக்கு தகுந்த பாடப்பிரிவில் சேர்ந்து படிக்கலாம். JEE (மெயின்) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும். பொறியியல் சேர்க்கை தொடர்பாக மேலும் அறிந்து கொள்ள பல்கலைக்கழகத்தின் www.drmgrdu.ac.in என்ற இணையத்தில் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: