சாத்தான்குளம் போலீசுக்கு ஆதரவாக வாட்ஸ்அப்பில் பதிவு: காவலர் நண்பர் குழு வாலிபரின் வீடு சூறை

* கார், பைக்குகள் உடைப்பு

* 20 பேர் மீது வழக்கு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் கைதான  போலீசாருக்கு ஆதரவாக வாட்ஸ்அப்பில் பதிவிட்ட காவலர் நண்பர் குழுவைச் சேர்ந்த வாலிபரின் வீடு சூறையாடப்பட்டதோடு கார் மற்றும் 3 பைக்குகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக 20 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்த எபிரேயர் பெஞ்சமின் மகன் சாம்சன் (22). சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர் நண்பர் குழுவில் தன்னார்வலராகப் பணியாற்றி வந்தார்.  இதனிடையே விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீசாரால் தாக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச்  சிறையில் அடைக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சி ஏற்படுத்தியது.

இவ்வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைதுசெய்யப்பட்டு மதுரையில் சிறையில் அடைக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் தர் உள்ளிட்ட 10 பேருக்கு ஆதரவாக சாம்சன், வாட்ஸ்அப்பில் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த அதே ஊரைச்சேர்ந்த சக்திவேல் மகன் சிவா என்பவருக்கும், சாம்சனுக்கும் கடந்த 15ம்தேதி வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சிவா, அவரது நண்பர்களான அபிஷேக், தினேஷ், நவீன், வினோத், மனோஜ், அருண், பிரவீன்  உள்ளிட்ட 20 பேரும் சாம்சன் வீட்டுக்கு மீண்டும் தகராறில் ஈடுபட்டனர். அத்துடன் வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடியதோடு வீட்டு முன் நிறுத்தியிருந்த கார், 3 பைக்குகளையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். மேலும் இதை தட்டிக்கேட்ட சாம்சனுக்கும் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர். புகாரின் பேரில் சிவா உள்ளிட்ட 20 பேர் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பெர்னாட் சேவியர் வழக்குப் பதிந்து தேடி வருகிறார்.

Related Stories: