சென்னை கோட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்காக இயக்கிய 134 ரயில்கள் மூலம் 1.96 லட்சம் பேர் பயணம்

சென்னை: ஊரடங்கு காலத்தில் சென்னை ரயில்வே கோட்டத்தில் இருந்து புலம்ெபயர்ந்த தொழிலாளர்களுக்கு 134 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. அதில் 1.96 லட்சம் பேர் பயணம் செய்தனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதையடுத்து நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த மாநிலத்திற்கு ரயில்களில் அனுப்பி வைக்கும் படி வலியுறுத்தினர். அதன்படி பீகாருக்கு 39 ரயில்கள், ஜார்க்கண்ட் 16, வடகிழக்கு மாநிலங்கள் 17, உத்தரபிரதேசம் 21, மேற்குவங்காளம் 17, சட்டீஸ்கர் 1, மற்ற நகரங்களுக்கு 23 என 134 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 76 சிறப்பு ரயில்களும், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 15 சிறப்பு ரயில்களும், திருவள்ளூரில் இருந்து 22 ரயில்களும், காட்பாடி மற்றும் செங்கல்பட்டு ரயில்நிலையத்தில் இருந்து தலா 9 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம், ஜோலார்பேட்டை, அரக்கோணம் சந்திப்பு ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து தலா ஒரு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை ரயில்வே கோட்டம்  சார்பில் ஜூலை 9ம் தேதி வரை 134 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதாகவும் இந்த  சிறப்பு ரயில்கள் மூலம் 1.96 லட்சம் பயணிகளை தங்களுடைய சொந்த  மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: