முகமது நபிகள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு இந்து பேரவை நிர்வாகி கைது

சென்னை: முகமது நபிகள் குறித்து சமூக வலைதளங்களில் தவறாக கருத்து பதிவு செய்ததாக இந்து பேரவை நிர்வாகி ஒருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், முஸ்லிம்களின் உயிரினும் மேலான இறைத்தூதர் முகமது நபி பற்றி முகநூல் மற்றும் யுடியூப் பேன்ற சமூக வலைதளங்களில் இழிவான முறையில் பதிவிட்டு, இரு தரப்பினரிடையே மத மோதல் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு விஷம கருத்துகளை சிலர் பரப்பி வருகின்றனர்.

குறிப்பாக, சிவனடியார் மவுண்ட் கோபால் என்ற நபர் தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார். எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இந்து தமிழர் பேரவை நிர்வாகியான சிவனடியார் மவுண்ட் கோபால் என்பவர் முகமது நபிகள் குறித்து தகவறான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் 153(ஏ), 295(ஏ), 505(i)(b) ஐபிசி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நந்தம்பாக்கத்தை சேர்ந்த கோபாலை கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: